முக்கிய செய்திகள்


கான்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் கான்பூரில் நடந்த ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தி பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் மும்பை நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை, குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா (58 ரன், 8 பவுண்டரி, 2 சிக்சர்), பிரன்டன் மெக்கல்லம் (48 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), வெய்ன் சுமித் (37 ரன்) ஆகியோரின் அதிரடியால் 17.5 ஓவர்களில் எளிதில் எட்டிப்பிடித்தது.
இந்த 7–வது தோல்வியின் மூலம் மும்பை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது. பின்னர் மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தொடக்கத்தில் நன்றாக பேட் செய்தோம். ஆனால் கடைசி இரு ஓவர்களில் (கடைசி 4 ஓவரில் 27 ரன் மட்டுமே எடுத்தனர்) நன்றாக ஆடவில்லை. 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னாவும், பிரன்டன் மெக்கல்லமும் வெற்றி வாய்ப்பை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்து விட்டனர். அவர்களுக்கு பாராட்டுகள். முடிந்த வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போய் விட்டது. குஜராத் வீரர்கள் தங்களுக்குரிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டனர். மொத்தத்தில் இது எங்களுக்குரிய நாளாக அமையவில்லை’ என்றார்

Tags:

No Comment to " ரெய்னா, மெக்கல்லம் வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ மும்பை கேப்டன் ரோகித் சர்மா சொல்கிறார் "