முக்கிய செய்திகள்

அஸ்வின் 2–வது இடத்தில் நீடிப்பு

By Unknown - Monday, May 23, 2016 No Comments
துபாய்,
ஹெட்டிங்லேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும், ஜோ ரூட் (இங்கிலாந்து) 2–வது இடத்திலும், வில்லியம்சன் (நியூசிலாந்து) 3–வது இடத்திலும் தொடருகிறார்கள். ஹெட்டிங்லே டெஸ்டில் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 14 இடங்கள் முன்னேறி 22–வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 11–வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 13–வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் முதலிடத்திலும் (872 புள்ளி), இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2–வது இடத்திலும் (871 புள்ளி) நீடிக்கிறார்கள். இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 10 விக்கெட்டுகளை சாய்த்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 இடங்கள் உயர்ந்து 3–வது இடத்தை (854 புள்ளி) பிடித்துள்ளார்.

Tags:

No Comment to " அஸ்வின் 2–வது இடத்தில் நீடிப்பு "