முக்கிய செய்திகள்

இயக்குனருடன் அனுஷ்கா மோதல்

By Indian Mails - Sunday, February 14, 2016 No Comments

ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி. தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர். ‘ருத்ராக்‌ஷா’ என்ற புது படத்தை இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இதில் நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டார். அவரும் ஓ.கே சொன்னார். திடீரென்று அனுஷ்காவுக்கு பதிலாக சமந்தாவை தேர்வு செய்தார் இயக்குனர். இது அனுஷ்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி கிருஷ்ணவம்சி தரப்பில் விசாரித்தபோது,’ஹீரோயின் கதை அம்சமுள்ள படங்களில் தொடர்ச்சியாக அனுஷ்கா நடித்து வருகிறார். வேறு ஹீரோயின் நடித்தால் வித்தியாசமாக இருக்கும் என்பதால் மாற்றம் செய்யப்பட்டது’ என்றனர். இதுபற்றி அனுஷ்கா கூறும்போது, ‘பாராட்டு, விமர்சனம் இரண்டுக்கும் எப்படி பதில் சொல்வது என்பது எனக்கு தெரியும். அந்த நிலையை தற்போது நான் தாண்டிவிட்டேன். எதுவும் என்னை பாதிக்காது. எல்ேலாருக்கும் பொதுவாக இருக்கவே விரும்புகிறேன்’ என்றார்.

Tags:

No Comment to " இயக்குனருடன் அனுஷ்கா மோதல் "